உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழ் வளர்ச்சி துறை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சி துறை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

ஈரோடு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட்டது. பள்ளி மாணவர் கட்டுரை போட்டியில் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மகளிர் உயர்நிலைப்பள்ளி மோனிஷா, நம்பியூர் குமுதா பதின்ம மேல்நிலைப்பள்ளி மேகவர்ஷினி, ஈரோடு வி.வி.சி.ஆர்.முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அனிஷாபானு; பேச்சு போட்டியில் திண்டல் வேளாளர் மெட்ரிக் பஹ்மிதா தஸ்னீம், தாசப்பகவுண்டன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி பிரேம்குமார், கருங்கல்பாளையம் அல்அமீன் மேல்நிலைப்பள்ளி சனா பாத்திமா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இவர்களுக்கு முறையே, 10,000 ரூபாய், 7,000 ரூபாய், 5,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.கல்லுாரி மாணவர் கட்டுரை போட்டியில் சித்தோடு ஸ்ரீவாசவி கல்லுாரி வாஞ்சிநாதன், திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி கவி மிதுனா, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி சந்திரமோகன்; பேச்சு போட்டியில் பெருந்துறை பாரதியார் பல்கலை விரிவாக்க மையம் அமல் உன்னிகிருஷ்ணன், அரச்சலுார் நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லுாரி தரணிப்பிரியா, பெருந்துறையில் உள்ள ஈரோடு சட்டக்கல்லுாரி ஞானப்பிரகாஷ் முதல் மூன்று இடங்களை பிடித்து ரொக்கப்பரிசு வென்றனர். இவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை நேற்று வழங்கினார். நிகழ்வில் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் இளங்கோ பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை