உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலில் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் துவக்கம்

கோவிலில் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் துவக்கம்

சத்தியமங்கலம், இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது. செயல் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார். நிகழ்வில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.மனைவியை தாக்கியகணவர் மீது வழக்குகோபி, ஜூன் 3கோபி அருகே அரசூரை சேர்ந்தவர் உதயகுமார், 31; சத்தியில் உணவு பொருள் விற்பனை ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரின் காதல் மனைவி வினோதினி, 27; தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். சத்தியில் ஒரு கல்லுாரியில் வினோதினி தற்போது பி.எட்., படித்து வருகிறார்.இந்நிலையில் வினோதினி மீது சந்தேகம் ஏற்பட்டு, தகாத வார்த்தை பேசுவதும், தாக்குவதிலும் ஈடுபட்டு வந்துள்ளார். வினோதினி புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ