உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வடிகால் அமைக்க எதிர்ப்பு: நம்பியூர் அருகே மறியல்

வடிகால் அமைக்க எதிர்ப்பு: நம்பியூர் அருகே மறியல்

நம்பியூர் : நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கரட்டுபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆயிபாளையம் மக்கள், சத்தி-பெருந்துறை சாலையில், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் சில மாதங்களுக்கு முன், நமக்கு நாமே திட்டத்தில், வடிகால் அமைத்து தார்ச்சாலை அமைக்கும் பணி பூஜை நடந்தது. தற்போது வேலை நடந்து வரும் நிலையில், ஆயிபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர், வடிகால் அமைக்கும் பணியை தடுத்துள்ளார். இதனால் மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு கூறினர்.நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா, பி.டி.ஓ., வரதராஜன் உள்ளிட்டோர், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். வடிகால் அமைக்கும் பணி தொடர்ந்து நடக்கும் என்று உறுதி கூறவே, மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால், 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி