விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு:விலைவாசி உயர்வை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமையில், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அரிசி, காய்கறி உட்பட அனைத்து அத்யாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம், குறைந்த விலைக்கு சன்னரக அரிசி, காய்கறி தொகுப்பு வழங்குவதால் மட்டும் மக்களை காப்பாற்றிவிட இயலாது. அனைவரும் வாங்கும் வகையில் விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஏற்கனவே, 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளிகளுக்கு உரிய நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை. பிற தொழிலாளர்களுக்கும் போதிய வேலை கிடைப்பதில்லை. இச்சூழலில் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் பாண்டியன், ஜோதிமணி, நவீன் உட்பட பலர் பங்கேற்றனர்.