உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிலையை அகற்ற எதிர்ப்பு தாளவாடியில் பரபரப்பு

சிலையை அகற்ற எதிர்ப்பு தாளவாடியில் பரபரப்பு

தாளவாடி: தாளவாடி அருகே அருளவாடியில், பொது இடத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர், அம்பேத்கர் சிலையை வைத்தனர். அனுமதியின்றி வைத்ததால், சிலையை அகற்ற வருவாய் துறையினர், போலீசாருடன் நேற்று மாலை சென்றனர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த மக்கள், தீக்குளிக்க போவதாக கூறினர். இதையடுத்து வி.சி., கட்சி ஈரோடு, திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மக்கள், போலீசார், வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அனுமதி பெற்று சிலை வைப்பதாக கூறவே, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை