பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்
ஈரோடுதமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிலுவை பண பலன்களை வழங்க வேண்டும். தொழிலாளி ஓய்வு பெறும் நாளில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர்.