நீதி கேட்டு ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஈரோடு புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில், காளைமாட்டு சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயகுமார் தலைமை வகித்தார். நெல்லை கவின் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். பின், கவினின் ஆணவ படுகொலைக்கு நீதி வேண்டும், படுகொலைக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், சாதி ஆணவ கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.