உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 13ல் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்

13ல் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம் வரும், 13 அன்று அனைத்து தாலுகாவிலும், தலா ஒரு ரேஷன் கடையில் நடக்க உள்ளது.அங்கு புதிய ரேஷன் கார்டு கோருதல், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.இதன்படி, 10 தாலுகாவில் முறையே, ஈரோடு தாலுகா - வில்லர-சம்பட்டி சாணார்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை - கரு-மாண்டிசெல்லிபாளையம்-5 பாளையம், மொடக்குறிச்சி - நஞ்சை ஊத்துக்குளி, கொடுமுடி - கொந்தளம் வள்ளிபுரம், கோபி - சிங்கிரிபாளையம், நம்பியூர் - கோசணம்-1, பவானி திப்பி-செட்டிபாளையம், அந்தியூர் - கீழ்வாணி மூங்கில்பட்டி, சத்தியமங்கலம் - செண்பகபுதுார், தாளவாடி - ஆசனுார் ரேஷன் கடையில் முகாம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை