மேலும் செய்திகள்
அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு
06-Oct-2024
பவானி: பவானி அருகே தொட்டிபாளையம். பழைய காலனியை சேர்ந்-தவர் கார்த்திக், 25; கூலி தொழிலாளி. அம்மாபேட்டையை சேர்ந்-தவர் பூமணி, 27; இவரின் மனைவி உடல்நிலை சரியின்றி பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவரை பார்க்க இருவரும் பல்சர் பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பினர். பவானி அரசு மருத்துவமனை அருகில் எதிரே வந்த பால் வண்டியில் மோதினர். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக், பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த பூமணி, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Oct-2024