ஈரோடு : ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், எம்.பி., ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடினர்.மாநகர் மாவட்ட காங்., பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜேஷ்ராஜப்பா, விவசாய பிரிவு பெரியசாமி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினர். நலத்திட்ட உதவிகளை மண்டல தலைவர் விஜயபாஸ்கர் வழங்கினார்.* ஈரோடு தெற்கு மாவட்ட காங்., கமிட்டி சார்பில், எம்.பி., ராகுல் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்து, சோலாரில் உள்ள அக்ஷயம் முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி, இனிப்பு வழங்கினர். பின், அந்த இல்லத்துக்கு தேவையான நலத்திட்ட உதவி, உணவு வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, காங்., கமிட்டி உறுப்பினர் முத்துகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.* சென்னிமலையில், தோப்புப்பாளையம் உதயம் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, பனியம்பள்ளி சிவக்குமார் தலைமையில் இனிப்பு, மதிய உணவு வழங்கி வட்டார, நகர நிர்வாகிகள் கொண்டாடினர்.* அந்தியூர் ரவுண்டானா, தவிட்டுப்பாளையம் மார்க்கெட், ஆப்பக்கூடல், அத்தாணி, பர்கூர் ஆகிய பகுதிகளில், காங்., கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.