உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே போலீசார் ஆய்வு

ரயில்வே போலீசார் ஆய்வு

ஈரோடு::சென்னை அருகே ரயில்வே தண்டவாளத்தில் போல்டு, நட்டு கழற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தண்டவாள பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, சந்தேக நபர்களை விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையிலான போலீசார், தண்டவாள பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றனர்.ஈரோட்டில் இருந்து கரூர், சேலம், திருப்பூர் மார்க்கமாக செல்லும் தண்டவாளங்களை கண்காணிக்கின்றனர். ரயில்வே போலீசார் நேற்று காலை டிராலியில் சென்றவாறு தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணித்தனர். தண்டவாளத்தை ஒட்டி வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ