உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடியில் காற்றுடன் மழை

தாளவாடியில் காற்றுடன் மழை

சத்தியமங்கலம்:தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மதியம், 3:00 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரம் விட்டு விட்டு கனமழையாக கொட்டித் தீர்த்தது. தாளவாடி, கெட்டவாடி, சூசைபுரம், மல்லன்குழி, சிக்கள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பலத்த காற்றால் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. பனகள்ளியில் சாலையோர புளியமரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகன போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றிய பிறகு, மாலை, 6:30 மணிக்கு போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி