உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் ரக் ஷா பந்தன் விழா

ஈரோட்டில் ரக் ஷா பந்தன் விழா

ஈரோடு, சகோதரத்துவத்தை போற்றும் வகையில், ரக் ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. ஈரோட்டில் வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர், ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அக்ரஹார வீதியில் நடந்த நிகழ்ச்சியின்போது, திருமணமாகாத இளம் பெண்கள், திருமணமான பெண்கள், தனது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு சகோதரருக்கும் ராக்கி கயிறு கட்டினர். பின் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து, இனிப்பு ஊட்டி பாசத்தை வெளிப்படுத்தினர். அதேபோல், ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு, தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஆண்கள் பரிசு பொருட்களை வழங்கினர். பின், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.* பிரம்ம குமாரிகளின், ராஜயோக தியான நிலையம், பெருந்துறை மையம் சார்பில், நேற்று ரக் ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்.எல்.ஏ. ஜெயக்குமார், டி.எஸ்.பி., வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசாருக்கு ராக்கி கயிறு அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ