ஜாக்டோ - ஜியோ சார்பில் பேரணி
ஈரோடு:ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து தாலுகா அலுவலகம் நோக்கி ஜாக்டோ - ஜியோ சார்பில் கோரிக்கை பேரணி சென்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ச.நேரு தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், மதியழகன், வீராகார்த்திக், ஆறுமுகம், ரமாராணி உட்பட பலர் பேசினர்.பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடன் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.தேர்தல் காலத்தில் தி.மு.க., வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வலியுறுத்தினர்.