மேலும் செய்திகள்
சுகாதார நடவடிக்கைகளால் பறவைகள் இறப்பு இல்லை
05-Sep-2025
ஈரோடு ஈரோடு, சோலார் அருகே வெண்டி பாளையம் பேரேஜ் ரோட்டில், பிரசாத் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தோட்டத்தில் ஒரு அரியவகை பறவை நேற்று மாலை அடிபட்டு கிடப்பதாக, விலங்குகள் நல ஆர்வலர் முருகனுக்கு தகவல் போனது. அவர் சென்று பார்த்தபோது, ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பஸ்ஸார்ட் என்ற அரிய வகை பறவை என்பது தெரிந்தது. இறக்கையில் அடிபட்டு கிடந்தது. அதை மீட்டு கால்நடை மருத்துவனையில் சிகிச்சை அளித்த பிறகு, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.
05-Sep-2025