உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

ஈரோடு, ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எஸ்.ஐ., மேனகா, ஈரோடு மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ஜெயகுமார் ஆகியோர், மலையம்பாளையம் - கணபதிபாளையம் நால்ரோட்டில், வாகன தணிக்கை செய்தனர்.ஒரு மாருதி ஆம்னி வேனில், 50 கிலோ எடையில், 38 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட, 1,900 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை, வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த பவானி, மண் தொழிலாளர், இரண்டாவது வீதியை சேர்ந்த பாலாஜி, 51, என்பவரை கைது செய்தனர். மலையம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில், மக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் வசிககும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை