மோசடியில் இழந்த ரூ.37 லட்சம் மீட்பு; உரியவர்களிடம் ஒப்ப-டைப்பு
ஈரோடு: ஈரோட்டில், இரு வாலிபர்களை மிரட்டி வங்கி கணக்கில் இருந்து எடுத்த, ரூ.37 லட்சத்தை மீட்டு சைபர் க்ரைம் போலீசார் உரியவர்-களிடம் ஒப்படைத்தனர். ஈரோட்டை சேர்ந்தவர் செல்வன். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது பேஸ்புக்கில் அறிமுகமான நபர், ஷேர் மார்க்-கெட்டில் பணத்தை முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை காட்டினார். இதை உண்மை என நம்பி, 42 லட்சத்தை பல்வேறு தினங்களில் அனுப்பி உள்ளார். பின்னர் பேஸ்புக்கில் அறிமுகமான நபர், திடீரென தனது கணக்கை முடித்து விட்டார். இதனால் ஷேர் மார்க்கெட்டில் தன்னை முத-லீடு செய்ய அறிவுறுத்திய நபர் குறித்த முழு விபரம் தெரிய-வில்லை. இதுபற்றி ஈரோடு சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். * இதே போல் ஜவுளி வியாபாரம் செய்து வரும், ஈரோட்டை சேர்ந்த சீனிவாசனிடம் மும்பை அந்தேரி பகுதியில் இருந்து, இந்-திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி பேசுவ-தாகவும், ஆதார் கார்டு மற்றும் சிம் கார்டு எண்ணை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே ஆதார் கார்டு முடக்கப்படும். எப்.ஐ.ஆர். பதிவு செய்து இருப்பதாகவும் விரைவில் கைது செய்யப்படுவீர். சிம் கார்டு முடக்கப்படும் என மிரட்டி வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பண இருப்பு விபரங்-களை வீடியோகால் மூலம் கேட்டறிந்தனர். பின்னர் வங்கி கணக்கில் இருந்த, ரூ.27 லட்சத்தை மின்னணு நிதி பரிமாற்ற வசதி மூலம் எடுத்து கொண்டனர். அதன் பின் இணைப்பு துண்-டிக்கப்பட்டது.இரு வழக்குகளையும், ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் விசா-ரித்து, பணத்தை எடுத்து கொண்ட வங்கியில் பேசி அந்த வங்கி கணக்கை முடக்கினர். செல்வன் இழந்த தொகையில், 10 லட்-சத்து, 17 ஆயிரமும், சீனிவாசன் இழந்த முழு தொகையான, 27 லட்சம் ரூபாையும் மீட்டனர். இத்தொகையை சைபர் க்ரைம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி., வேலுமணி, நேற்று ஈரோடு எஸ்.பி., ஜவகர் முன்னிலையில் உரிய-வர்களிடம் ஒப்படைத்தார்.