உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுதந்திர போராட்ட தியாகிக்கு சிலை அமைக்க கோரிக்கை

சுதந்திர போராட்ட தியாகிக்கு சிலை அமைக்க கோரிக்கை

ஈரோடு, கோபி, பாரியூர், நஞ்சகவுண்டன் பாளையம் வத்தாங்காட்டை சேர்ந்தவர் நாகேஸ்வரன். ஈரோடு கலெக் டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு விபரம்: அந்தியூர் பேரூராட்சி முதல் தலைவரும், தியாகியுமான வேலாயுதம், சுதந்திர போராட்டத்துக்காக சொத்துகளை இழந்துள்ளார்.அந்தியூரில், 30 ஏக்கர் நிலத்தை அரசு அலுவலகங்கள் கட்டி கொள்ள, விளையாட்டு மைதானம், பள்ளி அமைக்க வழங்கியது மட்டுமின்றி துாய்மை பணியாளர்களுக்கு இடமும், வீடும் தன் சொந்த செலவில் செய்துள்ளார். இவருக்கு அந்தியூரில் முழு உருவ சிலை அமைக்க கடந்தண்டு, அந்தியூர் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை