மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
27-Sep-2024
ஈரோடு: தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், 16ம் ஆண்டு துவக்க விழா நேற்று ஈரோட்டில் நடந்தது.மாநில சங்க தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சந்திர மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரோடு மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் ராதா கிருஷ்ணன் சிறப்பாளராக பங்கேற்றார். ஆண்டறிக்கை படித்தல், முக்கிய தீர்மானங்களை படித்தல் நிகழ்ச்சி நடந்தது. பொருளாளர் ராசமாணிக்கம் நன்றி கூறினார்.தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநகராட்சி-நகராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். மாநகராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரகம் என்ற தனியே உள்ளதை போன்று, மாநகராட்சிகளுக்கு என மாநகராட்சி நிர்வாக இயக்குனரகம் என்ற தனி இயக்குனரகத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
27-Sep-2024