ரூ.2 கோடி மதிப்பில் ஏரிக்கரையில் தடுப்பு சுவர்
அந்தியூர்:அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரிக்கரையில், ஒருங்கிணைந்த சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், சாலையை அகலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பணியை, எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். நிகழ்வில் பவானி நெடுஞ்சாலை உட்கோட்ட உதவி பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் பாபு சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.