உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.1.99 கோடி திரும்ப ஒப்படைப்பு

பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.1.99 கோடி திரும்ப ஒப்படைப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதியிலும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், தேர்தல் முறைகேட்டை கட்டுப்படுத்த, 144 குழுக்கள் சார்பில் தணிக்கை நடக்கிறது.நேற்று முன்தினம் வரை தொகுதி வாரியாக, ஈரோடு கிழக்கில், 75.11 லட்சம் ரூபாய், ஈரோடு மேற்கில், 84.20 லட்சம் ரூபாய், மொடக்குறிச்சியில், 7.82 லட்சம் ரூபாய், பெருந்துறையில், 26.70 லட்சம் ரூபாய், பவானியில், 20.94 லட்சம் ரூபாய், அந்தியூரில், 4.85 லட்சம் ரூபாய், கோபியில், 27.22 லட்சம் ரூபாய், பவானிசாகரில், 73.62 லட்சம் ரூபாய் என, 200 நபர்களிடம், மூன்று கோடியே, 20 லட்சத்து, 47,493 ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.தவிர ஒரு கோடியே, 7 லட்சத்து, 68,227 ரூபாய் மதிப்பில் புடவை, வேட்டி, அரிசி, துணிகள், பரிசு பொருட்களும் சிக்கியது. பணம் பறிமுதல் தொடர்பாக உரிய ஆவணங்களை, 158 பேர் சமர்ப்பித்து, 1 கோடியே, 99 லட்சத்து, 17,645 ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி