மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
14-Sep-2024
நம்பியூர்: அரசே மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த முதல் நிலை பட்டியலை விதிகளுக்கு உட்பட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நம்பியூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோபி கோட்ட செயலாளர் கருப்புசாமி தலைமையில், மாநில செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
14-Sep-2024