உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் இன்றும், நாளையும் தொடர்கிறது

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் இன்றும், நாளையும் தொடர்கிறது

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்இன்றும், நாளையும் தொடர்கிறதுஈரோடு, அக். 4-ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக கருங்கல்பாளையம் காந்தி சிலை முதல் காளைமாட்டு சிலை வரை (காவேரி சாலை, ஆர்கேவி சாலை, காந்திஜி சாலை) ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.சாக்கடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளின் படிக்கட்டு, சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரை, விளம்பர பதாகைகள், நடைபாதை ஆக்கிரமிப்பு என, 250க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள், ஜே.சி.பி., வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. சில இடங்களில் கடை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.பன்னீர்செல்வம் பார்க் முதல் மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை இன்றும், சத்தி சாலை ஸ்வஸ்திக் ரவுண்டானா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வரையிலான ஆக்கிரமிப்புகள் நாளையும் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ