உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சம்பங்கி கிலோ ரூ.240க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

சம்பங்கி கிலோ ரூ.240க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்று வட்டார பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்கள் புன்செய் புளியம்பட்டியில் உள்ள, பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த சில நாட்களாக முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால் சம்பங்கி பூ கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே விற்பனையான நிலையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் கிலோ, 240 ரூபாய்க்கு விற்பனையானது. விலை உயர்வால் சம்பங்கி பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல் மல்லிகை கிலோ, 1,680 ரூபாய், முல்லை, 850 ரூபாய், கோழிக்கொண்டை, 145 ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை