மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
14-Nov-2025
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர் சி.ஐ.டி.யு., சங்கம் சார்பில், மாநகராட்சி அலுவல-கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க துணைத்தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். உள்ளாட்சிகளில் பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல், டி.பி.சி., பணிகளை தனியாரிடம் கொடுப்பதை கைவிட வேண்டும். மாநகராட்-சியில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சியில் ஓய்வு பெற்ற தொழி-லாளர்களுக்கு ஓய்வுகால பணப்பலனை முழு-மையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.* அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவ-சாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து, மூன்றாவது வார்டு கவுன்சிலர் கீதா தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
14-Nov-2025