உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நலவாரிய ஸ்மார்ட் கார்டு கேட்டு துாய்மை பணியாளர்கள் முறையீடு

நலவாரிய ஸ்மார்ட் கார்டு கேட்டு துாய்மை பணியாளர்கள் முறையீடு

ஈரோடு, டிச. 24-பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணி செய்யும் துாய்மை பணியாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:நாங்கள் அனைவரும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தற்காலிக துாய்மை பணியாளர்களாக பணி செய்கிறோம். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் நிலையில், ஐந்து ஆண்டுக்கு முன் நலவாரியத்தில் பதிவு செய்து, நலவாரிய 'மஞ்சள் அட்டை' வைத்துள்ளோம். எங்களுக்கு இதுவரை நலவாரியத்தின் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படவில்லை. எங்களோடு பணி செய்து வரும் துாய்மை பணியாளர்களுக்கான சூப்பர்வைசர், வாட்ச்மேன் போன்றோருக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டு, நலத்திட்ட உதவிகளும் கிடைக்கிறது. மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு, எங்களுக்கும் 'ஸ்மார்ட் கார்டு' கிடைக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !