சென்னிமலையில் 22ல் சஷ்டி விழா தொடக்கம்
சென்னிமலை, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா, 22ம் தேதி துவங்குகிறது. அன்று காலை கைலாசநாதர் கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலைக்கோவிலுக்கு புறப்பாடு நடக்கும். அதை தொடர்ந்து மலை கோவிலில் விக்னேஸ்வர பூஜை நடக்கும். விழா நடக்கும் ஆறு நாட்களும் காலை, 10:00 மணிக்கு யாக பூஜை, அபிஷேகம், 1:00 மணிக்கு மகா தீபாரதனை நடக்கும். 27ம் தேதி இரவு நான்கு ராஜவீதிகளில் சூரசம்ஹாரம் நடக்கிறது. 28ம் தேதி காலை கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காப்பு கட்டி, சஷ்டி விரதம் இருக்க விரும்புவர்கள், 22ம் தேதி மதியம், 12:௦௦ மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல வேண்டும். காரில் கடத்தப்பட்ட குழந்தை