சாரணர் இயக்கத்தினர் செயல்பாடுக்கு வரவேற்பு
ஈரோடு, ஈரோடு இடையன்காட்டு வலசில் மாநகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளி சாரணர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் முறையாக தலைவாரி இருக்கின்றனரா? கை, கால்களில் நகங்களை வெட்டி உள்ளனரா என பரிசோதித்த பிறகே அனுமதிக்கின்றனர். அவ்வாறு இல்லாத மாணவ, மாணவிகள் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுக்கின்றனர். தினமும் கடைபிடிக்கப்படும் இந்த நடவடிக்கை பெற்றோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.