போட்டி தேர்வுக்கான பிரிவு கட்டமைப்பு பணி தீவிரம்
போட்டி தேர்வுக்கான பிரிவுகட்டமைப்பு பணி தீவிரம்கோபி, அக். 10-கோபி கிளை நுாலகத்தில், போட்டி தேர்வுக்கான பிரிவு கட்டமைப்பு பணி தற்போது தீவிரமாக நடக்கிறது. கோபி, வடக்கு பார்க் வீதி அருகே கிளை நுாலகத்தில், 1.40 லட்சம் நுால்களும், 13 ஆயிரம் வாசகர்களும் உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., - யு.பி.எஸ்.சி., பேங்கிங், டி.ஆர்.பி., ரயில்வேத்துறை, நீட் போன்ற படிப்புகள் சார்ந்த போட்டி தேர்வுக்கு தயாராக, கோபி கிளை நுாலகத்துக்கு, தினமும் 30 மாணவ, மாணவிகள் வருகின்றனர். போட்டி தேர்வுக்காக தயாராகும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, கடந்த ஜூன்.,14ல், 22 லட்சம் ரூபாய் செலவில், போட்டி தேர்வுக்கான பிரிவு கட்டமைப்பு பணி, நுாலகத்தின் இரண்டாம் தளம் கட்டமைப்புடன் துவங்கியது. அப்பணிகள் தற்போது வரை, 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் அனைத்தும், இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.