உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு ஈரோடு, டிச. 8-ஈரோட்டில், இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில், புயல், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.* ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம், அசோசியேசன் பார் பாலிமர் டிரேடு ஈரோடு, பெருந்துறை பேக்கரி உரிமையாளர் அசோசியேசன், ஈரோடு ரோட்டரி சென்ட்ரல், ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் அனுப்பி வைத்தனர். ஈடிசியா ஸ்ரீதர், வணிகர் பேரமைப்பு செல்வம், லாரன்ஸ் ரமேஷ், பிற நிர்வாகிகள் ராமலிங்கம், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.* ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, சர்க்கரை, போர்வை, துண்டு போன்றவற்றை, தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் ரவிசந்திரன் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி