உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூத்த தம்பதிகளுக்கு அந்தியூரில் கவுரவம்

மூத்த தம்பதிகளுக்கு அந்தியூரில் கவுரவம்

அந்தியூர், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 70 வயது பூர்த்தியடைந்த தம்பதிகளுக்கு சீர் வரிசை வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்படுகிறது. இதன்படி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், ஒன்பது மூத்த தம்பதியினருக்கு நேற்று மரியாதை செய்யப்பட்டது. இதில் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், கோவில் ஆய்வாளர் சிவமணி, முன்னாள் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், மணி விழா கண்ட, 13 தம்பதியினருக்கு கவுரவம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ