உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 450 மாத்திரைகளுடன் ஏழு பேர் சிக்கினர்

450 மாத்திரைகளுடன் ஏழு பேர் சிக்கினர்

ஈரோடு:ஈரோடு பெரியசேமூர் மாமரத்துபாளையம் பாலாஜி நகர் மூன்றாவது வீதி சந்தோஷ், 28; ஈரோடு கே.கே.நகர் சுப்பிரமணியன் நகர் நந்தகுமார், 23; கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகர் விக்னேஷ், 23; ஈரோடு கே.கே.நகர் சுப்பிரமணியம் நகர் வசந்த், 23, ஆகியோரிடம், ஈரோடு தாலுகா போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் சோதனை செய்ததில், 375 வலி நிவாரண மாத்திரை இருந்தது. அவற்றை போதைக்காக பயன்படுத்தவும், விற்கவும் வைத்திருந்ததை அறிந்து, பறிமுதல் செய்து, நான்கு பேரையும் கைது செய்தனர்.இதேபோல் பெரியசேமூர் பாண்டியன் வீதி நவீன், 25; ஈரோடு மாணிக்கம்பாளையம் வக்கீல் தோட்டம் சுதர்சன், 25; ஈரோடு கொத்துகாரர் தோட்டம் ஹரிநிவாஸ், 20; ஆகியோரிடம், வீரப்பன்சத்திரம் போலீசார் சோதனை செய்ததில், 75 வலி நிவாரணி மாத்திரை இருந்தது. மூவரையும் கைது செய்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி