உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கலெக்டர் அலுவலக சிக்னலில் நிழற்பந்தல் அமைப்பு

கலெக்டர் அலுவலக சிக்னலில் நிழற்பந்தல் அமைப்பு

ஈரோடு : வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த, ஈரோடு கலெக்டர் அலுவலக முன்புற சாலை சந்திப்பு சிக்னலில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில், வெயிலின் தாக்கத்தால் சிக்னலில் காத்திருக்க முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறி வந்தனர். போக்குவரத்து சிக்னல்களில் சென்னை, கோவையை போல நிழற்பந்தல் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று மாவட்ட போலீசார், நேற்று முதற்கட்டமாக பெருந்துறை சாலையில் உள்ள கலெக்டர் அலுவலக சந்திப்பு சிக்னலில், எளிதில் காற்று உள்ளே, வெளியே சென்று வரும் வகையிலான பச்சை நிற நிழற் பந்தல் அமைத்தனர். இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இதேபோல், பெருந்துறை-யில் இருந்து ஈரோடு வரும் சாலையிலும், கலெக்டர் அலுவலக சிக்னலில் நிழற்பந்தல் அமைய உள்ளது. பன்னீர்செல்வம் பூங்கா, காளை மாட்டு சிலை பகுதிகளில் நிழற் பந்தல்கள் தேவை யை பொருத்து அமைக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை