உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரோந்து பணியிலிருந்த எஸ்.ஐ.,மாரடைப்பால் உயிரிழப்பு

ரோந்து பணியிலிருந்த எஸ்.ஐ.,மாரடைப்பால் உயிரிழப்பு

புன்செய்புளியம்பட்டி:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் சாமி, 54. இவர், பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் காங்கேயத்தில் வசித்து வந்த நிலையில், இவர் பவானிசாகர் போலீஸ் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம், பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பவானிசாகர் தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.ரோந்து பணியில் இருந்தபோது, எஸ்.ஐ., உயிரிழந்தது போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை