உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சிலவரி செய்திகள்

ஈரோடு சிலவரி செய்திகள்

மொபெட் மீது கார் மோதிகோபியில் தொழிலாளி பலிகோபி: கோபி அருகே கோட்டுப்புள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ், 42, கூலி தொழிலாளி; டி.வி.எஸ்., எக்சல் மொபெட்டில், நேற்று முன்தினம் மாலை, கரட்டூர் சாலையில் சென்றார். அவ்வழியே கோபியை சேர்ந்த சச்சின், 25, ஓட்டி வந்த போர்டு கார் மோதியதில், முருகேஷ் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். முருகேசின் மகன் சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.பூட்டிய வீட்டில் தீ ஈரோடு: எழுமாத்துார், அம்மன் நகரை சேர்ந்தவர் துளசிமணி, 45; தனியார் மில் தொழிலாளி. சிமெண்ட் அட்டை வீட்டில் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் வீட்டுக்குள் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், வாஷிங் மிஷின், டி.வி., உள்ளிட்டவை எரிந்து விட்டன. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.போலீசை மிரட்டிய பெண்தாராபுரத்தில் பரபரப்புதாராபுரம், மே ௫-தாராபுரத்தில் அமராவதி சிலை ரவுண்டானா அருகே, நேற்று காலை, 11:00 மணியளவில், இளம்பெண் ஒருவர், வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு திரிந்தார். அங்கு போக்குவரத்து காவலர் நிற்கும் மரத்தடுப்பு பெட்டியில் புகுந்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதைப்பார்த்த பெண் போலீசார் அவரை எச்சரித்தனர். எதையும் கண்டு கொள்ளாத பெண், பெண் போலீசாரை மிரட்டினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கூடிவிட்டனர். இதனால் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் அந்தப் பெண்ணை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அச்சுறுத்திய அந்த பெண், சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என, போலீசார் தெரிவித்தனர்.தொழிலாளி விபரீத முடிவுபவானி: குருவரெட்டியூர், செங்குட்டை காலனியை சேர்ந்தவர் முருகன், 50; திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று காலை வேலைக்கு செல்வதாக வீட்டிலிருந்து சென்ற முருகன், குருவரெட்டியூர் சுடுகாட்டில் ஒரு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.ஆசனுார் மலை கிராமங்களில்3வது நாளாக மின் வெட்டு சத்தியமங்கலம்: ஆசனுார் மலைப்பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள கம்பிகள் மீது மீது மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் வினியோகம் தடைபட்டுள்ளது. ஆசனுார், கேர்மாளம், திங்களூர் ஊராட்சிகளில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மூன்றாவது நாளாக நேற்றும் மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் மின் தடை ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் என்று கண்டு பிடிக்க முடியாமல் மின்வாரியத்தினர் திணறி வருகின்றனர். அதேசமயம் பெரும்பாலான கம்பங்கள் மிகவும் பழையவை. எனவே அவற்றை அகற்றி விட்டு புதிய இரும்பு கம்பங்கள் அமைத்து, தடையில்லா மின்சாரம் கிடைக்க, அதிகாரிகள் வழிவகை செய்ய, மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை