உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

ஈரோடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கை, திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு பெறுதல், அதில் பெயர், விலாசம் உட்பட மாற்றங்கள் செய்தல், முதல்வரின் காப்பீடு திட்ட அட்டை, திருநங்கை, திருநம்பிக்கான அடையாள அட்டை பெறுதல், தொழில் துவங்க கடன், வங்கி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, சமூக நலத்துறை கண்காணிப்பாளர் கண்ணனிடம் மனுக்களை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை