உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆவின் வளாகத்தில் சிலை திறப்பு; முதல்வர் பங்கேற்பு

ஆவின் வளாகத்தில் சிலை திறப்பு; முதல்வர் பங்கேற்பு

ஈரோடு, ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் வளாகத்தில் பால்வள தந்தை பரமசிவன் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ.50 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட பரமசிவன் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வேலு, சாமிநாதன், மனோ தங்கராஜ், முத்துசாமி, தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம், தி.மு.க., மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின், பொதுமக்கள் அருகே சென்று வணக்கம் கூறி உற்சாகப்படுத்தினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், குடும்ப நண்பரான ஜெ.கே.கே. இல்லத்துக்கு சென்றார். அதன்பின், சித்தோடு கொங்கு மஹாலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ