உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜம்பை அருகே ஆடுகள் பலிக்கு காரணம் தெருநாய்கள்

ஜம்பை அருகே ஆடுகள் பலிக்கு காரணம் தெருநாய்கள்

பவானி, பவானி அருகே ஆடுகள் பலியான சம்பவத்தில், தெருநாய்கள் காரணம் என தெரியவந்துள்ளது.பவானி அருகே ஜம்பை, பெருமாள்பாளையம் புதுாரை சேர்ந்தவர் கண்ணாயாள், 75; இவரது பட்டிக்குள் புகுந்து மர்ம விலங்கு கடித்ததில், நேற்று முன்தினம் மூன்று ஆடுகள் பலியாகின. இரு ஆடுகள் பலத்தகாயம் அடைந்தன. அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை கொண்டு போலீசார் ஆய்வு செய்ததில், தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலியானது தெரிய வந்தது.பகல், இரவு என, ௨௪ மணி நேரமும் சுற்றித்திரியும் வெறி பிடித்த நாய்களை, ஜம்பை டவுன் பஞ்., நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை