மாநகரில் திரியும் சொரி நாய்கள் மாநகராட்சி நடவடிக்கை தேவை
ஈரோடு :இந்திய அளவில் தெருநாய் பிரச்னை பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சியும் அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனாலும் அவை நாய்களை கட்டுப்படுத்த முடியாத வகையிலேயே உள்ளது. குடியிருப்பு பகுதி மற்றும் தெருக்களில், நாய்களின் கூட்டணியை உடைக்க முடியவில்லை. ஜோடி சேர்ந்து திரியும் நாய்கள், எப்போது பாயும் என தெரியாமலே, அனுபவப்பட்ட பலர் பதுங்கியும், ஒதுங்கியும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் மாநகரின் ஒரு சில பகுதிகளில், முடி உதிர்ந்து, மினுக்கும் தோலுடன் சொரி நாய்களை பார்க்க முடிகிறது.அருவெறுப்பாகவும் உள்ளது. வெறிநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையோடு, இதுபோன்ற நாய்களை உடனடியாக பிடித்து செல்வதில், மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் குரலாக உள்ளது.