உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிச., 19ல் ஈரோட்டுக்கு முதல்வர் வருகை விழா மேடை அமைப்பது பற்றி ஆய்வு

டிச., 19ல் ஈரோட்டுக்கு முதல்வர் வருகை விழா மேடை அமைப்பது பற்றி ஆய்வு

டிச., 19ல் ஈரோட்டுக்கு முதல்வர் வருகைவிழா மேடை அமைப்பது பற்றி ஆய்வுஈரோடு, நவ. 28-ஈரோட்டில் டிச., 19, 20 ஆகிய நாட்களில் நடக்கும் அரசு விழா மற்றும் தி.மு.க., நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வருகை புரிய உள்ள நிலையில், சோலாரில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மேடை அமைப்பது பற்றி அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.டிச., 19ல் முதல்வர் ஸ்டாலின் ஈரோடு வருகை புரிகிறார். அன்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அரசின் திட்டங்களை கள ஆய்வு செய்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மறுதினம் (20) ஈரோடு மாவட்டத்தில் உள்ள, தி.மு.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக, ஈரோடு அடுத்த சோலாரில் அமைந்து வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் விழா மேடை அமைக்க, அந்த இடத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுமக்கள், பயனாளிகள், வாகன நிறுத்தம், அடிப்படை வசதிகள், முதல்வர் வந்து செல்வது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எஸ்.பி., ஜவகர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்தனர்.மாநகராட்சி இணை ஆணையர் தனலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை