துார்வாரும் பணி ஆய்வு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 18வது வார்டு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில், துாய்மை பணிகள் மற்றும் கால்வாய் துார்வாரும் பணி நேற்று நடந்தது. இதை மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் ஆய்வு செய்தார். சாக்கடை கால்வாயில் ஏற்படும் அடைப்புகளை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் துணை ஆணையர் தனலட்சுமி, இரண்டாவது மண்டல தலைவர் சுப்பிரமணியம், சுகாதார அலுவலர்கள் உடனிருந்தனர்.