உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் ஒன்றியத்தில் திட்டப்பணிகள் ஆய்வு

காங்கேயம் ஒன்றியத்தில் திட்டப்பணிகள் ஆய்வு

காங்கேயம்: காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் படியூர் ஊராட்சி இந்திரா நகரில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், திறந்தவெளி கிணற்றில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் ஆழ்துளை கிணறு மழை நீர் கட்டமைப்பு வளர்ச்சி திட்டப்பணி நடக்கிறது. இவற்றை அமைச்சர் சாமிநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், அமைப்பு சாரா ஓட்டுனரணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், படியூர் ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !