மேலும் செய்திகள்
வேளாளர் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு
16-Dec-2024
வேளாளர் மகளிர் கல்லுாரியில் தமிழியக்க அறிமுக விழா ஈரோடு, டிச. 26-ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லுாரியில் தமிழியக்க அறிமுக விழா நடந்தது.கல்லுாரி செயலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜெயந்தி வரவேற்றார். தமிழ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கவியருவி அப்துல் காதர் அறிமுகவுரை ஆற்றுகையில்,' பாரதியின் தமிழ்ப்பற்றையும், மாணவிகள் பின்பற்ற வேண்டிய மொழிப்பற்றையும் மனதில் பதியும் வண்ணம் எடுத்துரைத்தார். தமிழ் மொழி அறிந்தவன் அறிவாளி, அறியாதவன் நோயாளி' என்று மொழியின் அவசியத்தை எடுத்து கூறினார். வி.ஐ.டி., பல்கலை கழக நிறுவனரும், வேந்தரும், தமிழியகத்தின் நிறுவனருமான முனைவர் விசுவநாதன் சிறப்பாளராக பங்கேற்று பேசுகையில்,' இளங்கலை, முதுகலையில் பயின்று முதலிடம் பெறும் மாணவியருக்கு, வி.ஐ.டி., பல்கலை கழகம் சார்பாக தங்கப்பதக்கம் அளிக்கப்படும்' என, உறுதியளித்தார். தமிழியக்கத்தின் மாநில செயலாளர் சிவகுமார், அமைப்பு செயலாளர் வணங்காமுடி, துணை அமைப்பு செயலாளர் சிதம்பர பாரதி, கோவை மண்டல செயலாளர் மருத்துவர் அனுப் மற்றும் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள், இணை செயலாளர் முனைவர் ஜோதிமணி, பொருளாளர் செந்தாமரை ஆகியோர் பங்கேற்றனர். வேளாளர் மகளிர் கல்லுாரியில் பயிலும், 1,000 மாணவியர், செங்குந்தர் பள்ளியில் பயிலும், 1,000 மாணவ, மாணவியர் தமிழியக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர். தமிழியக்கத்தின், 60 உள்ளாட்சி பொறுப்பாளர்களுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட செயலாளர் பவள சங்கரி திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
16-Dec-2024