உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியர்கள் 2வது நாளாக மறியல்; 450 பேர் கைது

ஆசிரியர்கள் 2வது நாளாக மறியல்; 450 பேர் கைது

ஈரோடு :தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த (டிட்டோ-ஜாக்) தொடக்க பள்ளி ஆசிரியர்கள், ஈரோடு தாலுகா அலுவலகம் எதிரே, இரண்டாவது நாளாக நேற்றும் மறியலில் ஈடுபட்டனர்.ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயமனோகரன் கோரிக்கை குறித்து பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 11 கோரிக்கைகளை வலியுறுத்தினர். திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட்ட, 280 ஆசிரியைகள் உட்பட, 450 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !