உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருமாள் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பு

பெருமாள் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பு

ஈரோடு: தெலுங்கு வருட பிறப்பையொட்டி, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்-தது. இதில் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மக்கள் தரிசனம் செய்தனர்.இதேபோல் சவுராஷ்டிரா வருட பிறப்பும் கொண்டாடப்பட்-டது. இதில் சவுராஷ்டிர சமூக மக்கள் புத்தாடை அணிந்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். 713-வது சவுராஷ்டிரா விஜயாப்தம், கோட்டை பெருமாள் கோவிலில் நடந்தது. சபை தலைவர் ராமர் தலைமை வகித்தார். இதையொட்டி கஸ்தூரி அரங்கநாதர், கமலவள்ளி தாயாருக்கு வஸ்திரம் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சபை செயலாளர் சதீஷ்குமார், பஞ்சாங்கம் வாசித்தார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை