உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தில் விளையாடிய சிறுவன் கிணற்றில் விழுந்ததில் இறந்தான்.டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம், பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த செல்வன் மகன் கருப்புசாமி, 12; நான்காம் வகுப்பு வரை படித்த நிலையில், மூன்றாண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தான். கே.என்.பாளையம் மார்க்கெட் வீதியில் உள்ள தாத்தா வீட்டுக்கு நேற்று காலை சென்றான். அங்கு விளையாடிய நிலையில், அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான, உபயோகத்தில் இல்லாத, 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தான்.சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள், சிறுவனின் சடலத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !