மேலும் செய்திகள்
கோபியில் பாக்கு ஏலம்
21-Jul-2025
ஈரோடு, ஈரோடு விற்பனை குழு சார்பில், கோபியில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், செவ்வாய் கிழமை தோறும் பாக்கு ஏல விற்பனை நடந்து வருகிறது.வரும், 12 செவ்வாய் அன்று மதியம், 1:00 மணியளவில் தேசிய வேளாண் சந்தை எனும் இ-நாம் மூலம் பாக்கு ஏலம் நடைபெறும். பாக்கு பயிர் செய்யும் விவசாயிகள், வணிகர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று பயன் பெறலாம். கூடுதல் விபரத்துக்கு, 83441 27415 என்ற எண்ணில் விற்பனை கூட கண்காணிப்பாளரை அணுகலாம். ஏலத்துக்கு வரும் விவசாயிகள், வியாபாரிகள், தங்களது ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை எடுத்து வர வேண்டும்.
21-Jul-2025