உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாராயம் காய்ச்சியவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சாராயம் காய்ச்சியவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

ஈரோடு: ஈரோடு, கங்காபுரம், நரிபள்ளம் பகுதியில், கோபி மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். அதே பகுதியை சேர்ந்த ரவி, 50, என்பவரை போலீசார் கைது செய்தனர். எட்டு லிட்டர் சாராயம், 20 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க, எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் பரிந்துரையை ஏற்றதால், ரவி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான நகலும் அவரிடம் வழங்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை