உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 40 நிமிடம் கொட்டி தீர்த்த கனமழை மழைநீருடன், சாக்கடை நீரும் சேர்ந்ததால் அவதி

ஈரோட்டில் 40 நிமிடம் கொட்டி தீர்த்த கனமழை மழைநீருடன், சாக்கடை நீரும் சேர்ந்ததால் அவதி

ஈரோடு, நவ. 3-ஈரோடு மாநகரில் நேற்று காலை முதல் மதியம் வரை, வெயில் சுட்டெரித்தது. மாலை, ௪:௦௦ மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர் காற்று வீசியது. சில நிமிடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 40 நிமிடங்கள் அதேவேகத்தில் கொட்டி தீர்த்தது. இதனால் ஆர்.கே.வி. சாலை, கொங்காலம்மன் கோவில் வீதி, தில்லை நகர், முனியப்பன் கோவில் வீதி, சின்ன மார்க்கெட், கருங்கல்பாளையம், முனிசிபல் காலனி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, காந்திஜி சாலை, வெண்டிபாளையம் ரயில்வே பாலம், கே.கே.நகர் பாலம், காவிரி சாலை, பெரும்பள்ளம் ஓடை பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. ஈரோடு சின்ன மார்க்கெட், தில்லை நகர், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்தது. இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காந்திஜி சாலை பெரியார் நகர் ஆர்ச் அருகே பாதாள சாக்கடை மேன்ஹோல் சேதமடைந்து கழிவு நீர் வெளியேறி மழை நீருடன் சங்கமித்தது. மழை நின்ற பின் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாக்கடையை மாநகராட்சி நிர்வாகம் முறையாக துார் வாராதது ஒரு குற்றச்சாட்டாக இருந்தாலும், மக்கள் நினைத்த இடங்களில் கொட்டும், மக்கும் மற்றும் மக்காத குப்பை, சாக்கடை கால்வாயை அடைத்து கொள்வதால், மழை காலங்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.பெருந்துறையில்...பெருந்துறையில் நேற்று முன்தினம் மாலை, ஒரு மணி நேரம் கனமழை கொட்டிய நிலையில், நேற்று காலை வழக்கம்போல் வெப்பத்தின் தாக்கம் இருந்தது. மாலை, 4:00 மணிக்கு காற்று இடி-மின்னலுடன் தொடங்கிய கனமழை, இரவு வரை நீடித்தது. பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மின் வினியோகம் தடைபட்டது. * சத்தி சுற்று வட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம்,கெஞ்சனுார், தாண்டாம்பாளையம், கே.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, 6:00 மணிக்கு துாறல் போட்டது. இரவு, 8:00 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, 9:௩௦ மணியை கடந்தும் பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை