மேலும் செய்திகள்
டாக்டர்களுக்கு இனிக்காத அமைச்சரின் அறிவிப்பு!
12-Oct-2024
காந்தி சிலையை இடமாற்றம் செய்தால்போக்குவரத்துக்கு இடையூறு இருக்காது'ஈரோடு, அக். 17-''காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இருக்காது,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் காந்தி சிலை, சாலை விரிவாக்க பணியினால் தற்போது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த சிலையை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று மாலை கருங்கல்பாளையம் காந்தி சிலை இருக்கும் இடத்தையும், அந்த சிலையை மாற்றி வைப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, கருங்கல்பாளையத்தில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு நூலகத்தினையும், குயிலான் தோப்பு பகுதியில் கழிவு நீர் ஓடை தூர்வாரும் பணியையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அமைச்சர் முத்துசாமி கூறுகையில், ''ஈரோடு கருங்கல்பாளையத்தில் காந்தி சிலை நீண்ட காலத்திற்கு முன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியின்போது, காந்தி சிலை சாலையின் நடுவே வந்து விட்டது. இந்த சிலையை சற்று பின்னால் தள்ளி வைக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அது சம்மந்தமாக ஆணையர், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களிடம் கலந்தலோசித்து வருகிறோம். அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இருக்காது,'' என்றார்.இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் மனிஷ், துணை மேயர் செல்வராஜ், தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
12-Oct-2024